ELAMASTRO

வேத ஜோதிட ஆலோசனை

← முகப்பு பக்கத்திற்கு English

சனிப்பெயர்ச்சி - ஏன் இரு வேறு நிலைகள்?

கடந்த மார்ச் 29, 2025 அன்றே சனிப்பெயர்ச்சி முடிந்து விட்டதாகவும், சனி கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு இடம் பெயர்ந்து விட்டதாகவும் சில ஜோதிடர்கள் கணிக்கிறார்கள்.

ஆனால் சனி மார்ச் 6, 2026 அன்றுதான் பெயர்ச்சியானது என்று சில ஜோதிடர்கள் கூறுகிறார்கள். தமிழ்நாடு, இந்தியாவிலுள்ள புகழ் பெற்ற சனி ஸ்தலமான திருநள்ளாறு கோவிலும் இதையே வலியுறுத்தி பூஜை நடத்தியது.

திருநள்ளாறு கோவில் - தமிழ்நாட்டில் பிரபலமான சனி கோவில்

ஏன் இந்த முரண்?

வேத ஜோதிடம் இரு வேறு பஞ்சாங்களை அடிப்படையாகக்கொண்டு கிரகப்பெயர்ச்சிகளை கணக்கிடுகிறது:

  • வாக்கிய பஞ்சாங்கம் - பண்டைய கணித சூத்திரங்களை அடிப்படையாகக் கொண்டது
  • திருக்கணித பஞ்சாங்கம் - நவீன வானியல் கணக்கீடுகளை அடிப்படையாகக் கொண்டது
வாக்கிய மற்றும் திருக்கணித பஞ்சாங்க கணக்கீட்டு முறைகளின் ஒப்பீடு

இதில் எதை நாம் பயன்படுத்துவது அல்லது கணக்கில் எடுத்துக்கொள்வது?

மிக எளிதாக இதற்கு தீர்வு காண முடியும்.

எடுத்துக்காட்டாக:

ஒரு பஞ்சாங்கத்தில் ஒரு குறிப்பிட்ட தேதியில் சூர்ய உதயம் காலை 5.35 என்று போட்டிருப்பதாக வைத்துக்கொள்வோம். மற்றொரு பஞ்சாங்கத்தில் காலை 5.55 என்று போட்டிருப்பதாக வைத்துக்கொள்வோம்.

சூரிய உதய நேர ஒப்பீடு

இதில் எது சரி?

அன்று சூரியன் எத்தனை மணிக்கு உதிக்கிறதோ அதுதானே சரியான கணக்கு? காலை 5.55 க்கு உதித்தால் அந்த பஞ்சாங்கம்தானே சரியானது?

இப்படித்தான் சனிப்பெயர்ச்சியையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

வானியல் அவதானிப்புகளின்படி மார்ச் 29, 2025 அன்று சனி கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியானது. இது ஏதோ ஒரு நாளில் தாவிக்குதித்து பெயர்ச்சி ஆவது அல்ல. சிறிது சிறிதாக நகர்ந்து மார்ச் 29 அன்று முழுவதுமாக மீன ராசியில் பிரவேசிக்கிறது.

எனவே உண்மையான கேள்வி இதுதான்:

வானியல் அவதானிப்பு சனி ஏற்கனவே 2025ல் மீனத்தில் நுழைந்ததாக காட்டினால், ஜோதிடர்கள் இன்னும் 2026ல் மட்டுமே மாற்றத்தை கருத வேண்டுமா?

உங்கள் கருத்து என்ன?